ஊரைப் பாக்கணும். 50 வருஷம் கழிச்சு இப்போ எப்படி இருக்கும்.தெரியல. Egmore Station வந்தாச்சு. Pandian Express platformக்கு வந்துண்டுருக்கு. மதுரைக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சு. Train 8:30 மணிக்குத்தானே கெளம்பும், நாம ஒரு வெத்தலையை போட்டு துப்பிட்டு தூங்க வேண்டியதுதான். என்னோட ஊர் எப்படி இருந்தது,மனசு அசபோட ஆரம்பிச்சுது.
| அக்ரஹாரத்துக்குப் போகும் வழி |
அட நம்ம காளியம்மன் கோயில். பக்கத்துலதான் சீனிவாச அண்ணாவி வீடு. அண்ணாவி நாதஸ்வரம் பிப்பிப்பீ , காதுல கேக்குறது. அவனோட 2வது பையன் ஆந்தை சுப்ரமணிதான் தவில். டும்டும் டுடு டும்,ஏதோ அடிப்பான். ஜால்ரா ஜிங் ஜிங் ஜிங் (சிங்கி). ஏதோ ஒரு கல்யாணம், கார்த்தின்னா ஒரு மங்கள இசை வேணும்ல, அதுனாலதான் ஒரே வித்வான். சீனுவாச அண்ணாவி. பேருசொன்னா ஊருக்கே தெறியும். அது இருக்கட்டும் மேலே போவோம்.
அந்த ரோடுல நேர மேற்கே 10,20 அடி நடந்தா ரோட்டுக்கு தெற்கே 5அல்லது 6அடி பள்ளம். அது பள்ளமில்ல ,1 ஏக்கர் அளவுல ஒரு தோட்டம். அந்த தோட்டம் முடிஞ்ச ஒடனே, அதன் மேற்குப் பக்கம் தெற்கு வடக்கா ஒரு ரோடு போரது. அது மேட்டுப்பட்டில இருக்கும் தேவமார் தெரு. அந்த ரோட்ல தான் அந்தத் தோட்டத்துக்கு நொழய வழி இருக்கு.
நொழஞ்சவொடனே ஒரு பெரிய கெணறு. கெணத்துல நெரய தண்ணி இருக்கு. கெணத்தங் கரைல பெரிய செவ்வரளி மரங்க. செவ்வரளி, மரமா வளருமானு எனக்குத் தெரியல. ஆனா என்னோட ஒயரத்துக்கு மேல வளந்திருக்கு. கட்ட கட்டயா நெருக்கமா புதர் மாதிரி வளந்திருக்கு. பச்ச பசேல்னு ரோஸ் நெர பூக்களோட அழகா இருக்கு. பாக்க ஒரு கண் போராது.
அந்தப்பக்கம் இருக்கரவாளுக்கு இந்த கெணறுதான் தண்ணி கொடுக்கும். குடிக்கத் தண்ணி எடுக்கரவாளெள்ளாம், ஒரு சின்ன வாளில பெரிய கயரு கட்டி, அதையும், பள பளன்னு தேச்ச பித்தளை சருவத்தையும், எடுத்துண்டு வந்துடுவா. கெணத்தோட கரைல (செவுத்தில), நின்னு கெணத்தக்குள்ள வாளிய மள மளன்னு விட்டு,குணிஞ்சு நிமிந்து கயர பிடிச்சு வாளிய மேல இழுத்து தண்ணிய சருவத்துக்குள்ள விடுவா. இப்படியே திரும்பத் திரும்ப பண்ணி, சருவத்த ரொப்பிடுவா. சருவம் ரொம்பினவுடனே அதை assalta தூக்கி இடுப்ல வச்சுண்டு அவா அவா ஆத்துக்கு பொரப்ட்டுடுவா.
தண்ணி எடுக்க ராட்ணமெல்லாம் கெடயாது. அவா அவா ஆத்துல கொட்டிவச்சுக்க storage எல்லாம் கெடயாது. குடிக்கரதுலேர்ந்து எல்லாத்துக்கும் இப்படித்தான் தண்ணி எடுக்கணும்.எப்டி சமாளிக்கராளோ, எனக்குத் தெரியல .
தேவமார்தெருன்னு சொன்னேன்லயா, அவாள்ளாம் அக்ரஹாரத்து அய்யங்கார் குடும்பங்கள அண்டி இருக்கரவா (ரெண்டு குடும்பங்களைத் தவிர). அண்டி இருக்ரவான்னா அடிமைகளில்ல. நிலங்கரை எல்லாம், அய்யங்கார்கள்ட்ட இருந்ததாலே அவா தான், வேல கொடுத்து கூலி கொடுப்பா. அதனாலதான். 2குடும்பங்களத் தவிரன்னு சொல்லியிருந்தேனலயா? அதுல ஒன்னு ராமசாமித்தேவர். ரெண்டாவது சிவலிங்கதேவர். ராமசாமி தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிட்டார். பேரையும் பால் ராமசாமின்னு மாத்திண்டுட்டார். தாசில்தார் வேலை. சிவலிங்கத்தேவரும் வசதி வாய்ப்பா இருந்தார். என்ன வேலை செய்தார்னு தெரியாது.
தேவமார்களிளே (தேவரை தேவமார் என்றும் அதே போல செட்டியார் ஜாதியை செட்டிமார் என்றும் பிள்ளை ஜாதியை பிள்ளைமார் என்றும் அந்தந்த ஜாதிகள் பேருடன் மார் என்று சேர்த்து சொல்வது எங்க ஊர் வழக்கம். ) என்னோட நினைவிலே இருப்பவங்க சின்னபாண்டி, பெரியபாண்டி ,சங்கேரு( அவன் பெயர் சங்கர் என்பது இப்ப யோசிக்கும் போது தான் புரியுது). பம்ம்பயத்தேவர் ,சங்கரலிங்க தேவர் (கொத்தனார் ) வெள்ளளச்சாமி அவனோட மகன் கருப்பசாமி.
சின்னபாண்டி கூலி வேலைக்கெல்லாம் போக மாட்டான். எருமை, வான்கோழி எல்லாம் வளப்பான். எரும மாட்டை பார்த்தாலே கண் பட்டுடும். அவ்வளவு சுத்தமா வச்சுப்பான். கருகருன்னு , கொழுகொழுன்னு இருக்கும். வான்கோழி பெருசா இருக்கும். அந்த வயசுல கிட்டக்க போரதுக்கே பயமா இருக்கும். அவனோட அண்ணன் தான் பெரிய பாண்டி ரொம்ப நல்லவன் டீசண்டா இருப்பான். சுப்பா ரெட்டியார் ஜின்னிங் பேக்டரில வேலை செய்யறான்.
சங்கேரு இருக்கானே அவன் எல்லா வேலையும் செய்வான். நன்னா சிலம்பாட்டம் ஆடுவான். பம்பயத்தேவன் இருக்கானே அவன் பெரிய திருடன் . ராத்திரி வேளைல வீட்டுக்குள்ள புகுந்து திருடுவது தான் அவன் தொழிலே. திருடுவான் ஜெயிலுக்குப் போவான் திரும்ப வருவான். திரும்ப திருடுவான். அதே திரும்பத் திரும்ப நடந்திண்டிருக்கும் .அவனைப் பத்தி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டுருக்கேன். என்னன்னு அடுத்த பக்கத்துல பாப்போமா?????
Comments
Post a Comment